உலகளவில் நகரமயமாக்கப் போக்கு தொடர்ச்சியாக முன்னேற்றப்பட்டு வருவதுடன், அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை, பல்வகை தேவைகள், பொது வள ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள், நகர நிர்வாகத்தில் மேலதிக கோரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என், உலகளாவிய 21 நாடுகளில் பிரதிநிதித்துவம் வாய்ந்த 25 நகரங்களைச் சேர்ந்த 7288 பேருடன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நகர நிர்வாகத்தில், பொது மக்களின் தேவைகளுக்குப் பூர்த்தி செய்தல், பொது சேவையின் தரத்தை உயர்த்துதல், மக்களின் கவலைகளைத் தெரிவித்து, பதில்களைப் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மிகப் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்தனர். அத்துடன், “மக்களே முதன்மை” என்ற சீன நகரத்தின் வளர்ச்சிச் சிந்தனையை அவர்கள் பாராட்டினர்.
மேலும், சீனா முன்வைத்த “விரிவான ஆலோசனை, கூட்டுப் பங்களிப்பு, பயன்களின் பகிர்வு” என்ற கருத்துக்கு, இக்கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த 89 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்ததோடு, பொது மக்கள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்புகள் நகர நிர்வாகத்தில் கூட்டாக கலந்து கொள்வது என்ற அமைப்புமுறையையும் பாராட்டினர். தவிரவும், அறிவியல் ரீதியிலான திட்டமிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் மூலம், பொது சேவையின் துல்லியத்தன்மையை உயர்த்த 90.5 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர். இது குறித்து பல்வேறு நாடுகள் சீனாவுடன் விரிவாக ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
