“2026 உலக நகராட்சித் தலைவர்கள் உரையாடல்-லோயாங்”எனும் நிகழ்வு, அக்டோபர் 9 முதல் 11ஆம் நாள் வரை, சீனாவின் ஹேநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெற்றது. அப்போது, சீனா, பிரிட்டன், இத்தாலி, அர்ஜென்டீனா, அல்ஜீரியா உள்ளிட்ட 10க்கும் மேலான நாடுகளிலிருந்து சுமார் 90 மாநகராட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள், அறிஞர்கள் முதலியோர், பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் பரவல், தொழில் துறையின் மேம்பாடு, நகரங்களின் புதுப்பிப்பு போன்றவை குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள், லோயாங் நகரிலுள்ள பல தயாரிப்பு தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, அறிவார்ந்த புத்தாக்க தயாரிப்பு துறையில் சீனாவின் உயிர் ஆற்றலை நேரிடையாக அனுபவித்தனர்.
லோயாங் அருங்காட்சியகம், சுய் மற்றும் தாங் வம்ச பண்டைகால லோயாங் நகரம், லோ யி பண்டைகால நகரம் ஆகியவற்றில் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டுப் பணியையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
