ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ அன்கட் வெர்ஷன் ரிலீஸ்; ஆனால் இந்தியாவில் இல்லை  

Estimated read time 1 min read

ஆதித்யா தார் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான ‘துரந்தர்-2’ திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பான ‘Raw and Undekha’ இன்று (மே 15) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
திரையரங்குகளில் வெளியானதை விட கூடுதல் காட்சிகளுடன் வெளியாகும் இந்தப் பதிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சற்றுமுன் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், “துரந்தர்: தி ரிவெஞ்ச் நாளை அமெரிக்காவில் வெளியாகிறது” என அறிவித்துள்ளது.
அமெரிக்கா மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இருப்பினும், இந்தியாவில் உள்ள நெட்பிளிக்ஸ் பயனர்கள் இந்தப் படத்தை அங்கு பார்க்க முடியாது.
இது இந்திய ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

You May Also Like

More From Author