உங்மங்கோலியாவில் கணித்தல் திறனை ஆய்வு செய்யும் ஷிச்சின்பிங்

அக்டோபர் 16ஆம் நாள், உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள உலன்ட்சாப் நகரில் ஆய்வு பயணம் மேற்கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் ட்சஹர் உயர் புதிய தொழில் நுட்ப மண்டலத்துக்கு வருகை தந்தார். இங்கு அவர் இப்பிரதேசத்தில் கிழக்குத் தரவு, மேற்கு கணினி திட்டப்பணிக்கான கட்டுமானம், பசுமை கணித்தல் திறன் தொழிலின் வளர்ச்சி முதலியவற்றை அறிந்து கொண்டார்.

இப்பயணத்தின் போது, அவர் முழு நாட்டின் ஒருமைப்பாட்டு மயமாக்கக் கணித்தல் திறனை உருவாக்குவது பற்றி கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் கூறுகையில், அறிவியல் திட்ட வரைவு, பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றை வலுப்படுத்தி, முடிவடைந்த திட்டப்பணிகளை உயர் பயனுடன் இயங்குவதற்கு உத்தரவாதம் அளித்து, தொடர்ச்சியான திட்டப்பணிகளின் கட்டுமானத்தை திட்டப்படி நிறைவேற்ற வேண்டும். தொழிற்துறைச் சங்கிலியை ஆக்கப்பூர்வமாக நீட்டி, எண்ணியல் பொருளாதாரம் மற்றும் உண்மையான பொருளாதாரத்தின் ஆழமான ஒருங்கிணைப்பை முன்னேற்றி, கணித்தல் திறன் மேம்பாட்டை வளர்ச்சி மேம்பாட்டாக இடைவிடாமல் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author