ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான தனது திங்கட்கிழமை தொலைபேசி அழைப்பு “மிகவும் சிறப்பாக நடந்தது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
மேலும் மாஸ்கோவும், கீவும் போர் நிறுத்தத்தை எட்டுவதையும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு “உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்” என்றும் அவர் உறுதிபட கூறினார்.
இந்த உரையாடல் குறித்து ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட டிரம்ப், “போப்பால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வாடிகன், பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக” குறிப்பிட்டார்.
“செயல்முறை தொடங்கட்டும்!” என்று அவர் மேலும் கூறினார்.
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்:அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின்
