சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் மார்ச் 26ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், சீனாவின் தொழில் துறை பொருளாதாரம் சீராக மீட்சியடைந்துள்ளது.
தொழிற்துறை உற்பத்தி உயர்வேகமாக அதிகரிப்பு அடைந்துள்ளது. முதல் 2 மாதங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உற்பத்தித் தொழில் துறைக்கான முதலீடு நிதானமாக அதிகரித்து, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 9.4 விழுக்காடு அதிகமாகும். அத்துடன், தொழிற்துறையின் ஏற்றுமதி அதிகரிப்பு வேகம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது என்றார்.
மேலும், புதிய இயக்காற்றல் இடைவிடாமல் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னேறிய உற்பத்தித் தொழில் துறையின் வளர்ச்சியை சீனா பெரிதும் முன்னேற்றி, புதிய தர உற்பத்தி திறனின் வளர்ச்சியை விரைவுபடுத்தி வருகிறது.
தகவல் தொலை தொடர்பு துறை சீராக வளர்ச்சி அடைந்துள்ளது. தவிரவும், நடுத்தர சிறிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.