ஐரோப்பிய-ஆசிய பயணம் குறித்து வாங்யீ கருத்துக்கள்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 19ம் நாள் சோஃபியா நகரில் பல்கேரிய வெளியுறவு அமைச்சர் பெட்ரோவா அம்மையாருடன் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியாக, ஆசிய தொடர்பு மற்றும் நம்பிக்கையை முன்னேற்றும் மாநாட்டில் பங்கெடுத்த வாங்யீ, அஜர்பைஜான், கிரோஷியா, மான்டே நீக்ரோ குடியரசு, பல்கேரியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணம் குறித்து அவர் கூறுகையில், அமைதிக்கான அடித்தளம் நம்பிக்கையாகும். நட்பானது மதிப்புள்ள செல்வமாகும். ஒத்துழைப்பு, உறுதியான உந்து சக்தியாகும். கூட்டாளியுறவு, பொது குறிக்கோளாகும் என்று 4 அம்ச கருத்துக்களைத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author