“புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகுக்கு கிடைக்கும் வாய்ப்புகள்” என்ற கலந்துரையாடல் கூட்டம்
“புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள்” என்ற தலைப்பிலான உலகளாவிய கலந்துரையாடல் கூட்டம், அண்மையில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், மியன்மார், துருக்கி, ஆப்கானிஸ்தான், மங்கோலியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது.
இதில் ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சிந்தனைக் கிடங்கு, வணிகத் துறை தலைவர்கள், ஊடகத் துறையினர்கள், இளைஞர் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது மத்தியக் கமிட்டியின் 3-ஆவது முழு அமர்வில், சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவது, உயர்நிலை வெளிநாட்டுத் திறப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், சீனாவின் உயர்தர வளர்ச்சியால், ஆசிய நாடுகளுக்குக் கிடைத்துள்ள ஊக்கம் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர். இந்தியாவின் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில ஆணையத்தின் பொதுச் செயலாளர் முகமட் சலீம் இதுகுறித்து கூறும் போது, பல கோடி மக்களை வறுமையிலிருந்து விடுத்துள்ளது, சீனாவின் ஈடற்ற சாதனை என்று பாராட்டு தெரிவித்தார்.