தாய்லாந்தின் புகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 விமானத்தில், ஒரே நேரத்தில் பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளிலும் அழுத்தம் குறைந்து திடீர் கோளாறு ஏற்பட்டதாக விமான விபத்து விசாரணை அமைப்பு தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, தானியங்கி இயக்கம் ரத்தாகி, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வானில் சுமார் 300 அடி தூரம் வரை கீழே சரிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது.
வானில் திடீரென 300 அடி கீழே சரிந்த விமானம்! ஏர் இந்தியா புகெட் விமானத்தில் தொடர் ஹைட்ராலிக் கோளாறு
