பிப்ரவரி 10ஆம் நாளில், சீனப் புத்தாண்டு தொடர்பான ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி ஹர்பின் நகரில் நடைபெற்றது. 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிக்கான பிரதிநிதிக் குழுவின் பணியாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.