ஐநா வெளியிட்ட அதிரடி கறுப்புப் பட்டியல் – கொந்தளிக்கும் நாடுகள்!  

Estimated read time 0 min read

உலக அளவில் மோதல்கள் நிலவும் பகுதிகளில் கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐநாவின் வருடாந்திர கறுப்புப் பட்டியலில், வரலாற்றிலேயே முதல்முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள இந்த 35 பக்க விரிவான அறிக்கையானது, சர்வதேச அளவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 77 அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைப் பட்டியலிட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 இல் உலகளாவிய போர் மண்டலங்களில் இத்தகைய கொடூரமான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது.
ஏற்கனவே கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலின் பின்னணியில் ஹமாஸ் அமைப்பினர் இப்பட்டியலில் நீடிக்கின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author