2026 ஃபைனான்சியல் ஸ்ட்ரீட் மன்றக் கூட்டம் பெய்ஜிங்கில் துவக்கம்

Estimated read time 0 min read

2026ஆம் ஆண்டு ஃபைனான்சியல் ஸ்ட்ரீட் மன்றக் கூட்டம், அக்டோபர் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. உலகளாவிய நிதி வளர்ச்சிக்கு திறப்பு, ஒத்துழைப்பு மற்றும் உள்ளடக்கும் தன்மை வாய்ந்த சூழ்நிலையை உருவாக்குவது என்ற தலைப்பில் 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் இத்தலைப்பின் கீழ் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

துவக்க விழாவில் சீன மக்கள் வங்கித் தலைவர் பான் கொங்ஷெங் கூறுகையில், எதிர்காலத்தில் நாணயக் கொள்கையின் கட்டமைப்பைத் சீராக மதிப்பீடு செய்து அதனை மேம்படுத்தி, ரென்மின்பி நாணயத்தின் சர்வதேச மயமாக்கத்தை தொடர்ந்து உயர்த்தவும், நாணயக் கொள்கை நிலைமைக்கான ஆய்வு, நிதி இடர்ப்பாடு கண்டறிவது உள்ளிட்ட துறைகளில் ஏஐ வசதியின் பயன்பாட்டை ஆராயவும் சீன மக்கள் வங்கி செயல்படும் என்று தெரிவித்தார்.

தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாகத்தின் தலைவர் டிங் சியாங்ஜுன் கூறுகையில், ஒழுங்குமுறையின் செயல்திறனை அதிகரித்து, சீர்திருத்தத்தை விரைவுபடுத்தி, நிதிச் சேவையைத் தொடர்ந்து உயர்த்தவும், நிதித் திறப்புக்கான புதிய இடத்தை ஆக்கமுடன் விரிவாக்கி, சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக பரிமாற்றத்தை ஆதரித்து, உலகளாவிய நிதி மேலாண்மை முறைமையை மேம்படுத்தவும் தேசிய நிதி ஒழுங்குமுறை நிர்வாகம் பணியாற்றும் என்று குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author