பிராந்திய அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு சீனா முயற்சி

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல், துஷாபே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான 25ஆவது கூட்டத்தில் கலந்துகொண்ட போது, ஈரானின் முதல் துணை அரசுத் தலைவர் அரேவைச் சந்தித்துரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க சீனா தன்னால் இயன்ற அனைத்தையும் முயற்சி செய்து வருவதோடு, பிராந்திய அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சியை நனவாக்குவற்கும் பாடுபடும். சீன-ஈரான் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 55 ஆண்டுகளில், இரு நாட்டுறவு நிலையாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது. ஈரானுடன் சேர்ந்து, பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author