மத்திய சோஷலிச கழகம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அக்டோபர் 20ஆம் நாள் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
அதில் ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், கடந்த 70 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டாகப் பாடுபடும் கட்சி சாராத பிரதிநிதிகளை இக்கழகம் பயிற்றுவித்து நாட்டுப்பற்றுடைய ஐக்கிய முன்னணியை வலுப்படுத்தி வளர்ப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது என்றார். புதிய துவக்க புள்ளியில் புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையை வழிக்காட்டலாகக் கொண்டு கல்விக்கான சரியான திசையை உறுதிப்படுத்தி அரசியல் பயிற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி அரசியல் ரீதியில் பொது கருத்துக்களை பரந்த அளவில் திரட்டி கட்சிக்கும் நாட்டின் முக்கிய பணிகளுக்கும் மேலும் நன்றாகச் சேவையளிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
மத்திய சோஷலிச கழகம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட விழா 20ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதில் ஷிச்சின்பிங்கின் வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.
