தூதாண்மை பற்றிய ஷிச்சின்பிங்கின் படைப்புகளின் முதலாவது மற்றும் 2ஆவது தொகுப்புகள் அண்மையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சி மத்திய கமிட்டி, புதிய யுகத்தில் சீனா மற்றும் உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் போக்கைக் கடைப்பிடித்து, முக்கியமான தூதாண்மை கோட்பாடு மற்றும் நடைமுறைகளில் புத்தாக்கத்தை ஊக்குவித்து வருகிறது. தூதாண்மை பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனை, புதிய காலத்தில் சீனாவின் வெளி விவகாரப் பணிக்கு அடிப்படை கொள்கையையும் செயலுக்கான வழிகாட்டலையும் வழங்குகிறது.
தூதாண்மை பற்றிய ஷிச்சின்பிங்கின் படைப்புகளின் முதல் 2 தொகுப்புகளில், 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் வரை தூதாண்மை பணிகள் பற்றிய ஷிச்சின்பிங்கின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான 134 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
