ஜூலை 28 மற்றும் 29 ஆம் நாட்களில் ஸீவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எட்டப்பட்ட ஒத்த கருத்துகளின்படி, அமெரிக்காவின் 24 சதவீத பரஸ்பர சுங்க வரி மற்றும் சீனத் தரப்பின் எதிர் நடவடிக்கைகளின் இடை நிறுத்தத்தை 90 நாட்களுக்கு நீட்டிக்கச் சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த ஒத்தக் கருத்துகளானவை இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் நிலவும் கருத்து வேற்றுமைகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாவிடினும், இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வை நிலைநிறுத்துவதற்கு மேதிக நேரத்தை வழங்கியுள்ளன. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கும் பொருத்தமான இக்கருத்துகள் உலகப் பொருளாதாரத்துக்கு உறுதித் தன்மையைக் கொண்டு வந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இரு தரப்பின் பேச்சுவார்த்தையில் நிறைய கருத்து ஒற்றுமைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, நிலையான சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவு இரு நாடுகளுக்கு மட்டுமல்ல உலகப் பொருளாதாரத்துக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இரு தரப்பும் உணர்ந்துள்ளன. சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு அமைப்பு முறையின் பங்களிப்பை நன்கு வெளிக்கொணர்ந்து மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்ற வேண்டும் என்றும் இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன. இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக அமெரிக்க தரப்பு விவரித்துள்ளது. பிரச்சினையைத் தீர்க்கும் விருப்பம் இரு தரப்புக்கும் உண்டு என்பதை இது வெளிக்காட்டியுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.