15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியில் தடகளம், நீச்சல், துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 8 புதிய உலகப் சாதனைகள், 5 உலக இளைஞர்கள் சாதனைகள், 13 ஆசிய சாதனைகள், 10ஆசிய இளைஞர்கள் சாதனை, 14 சீனத் தேசியப் சாதனைகள் மற்றும் 7 சீனத் தேசிய இளைஞர்கள் சாதனைகள் பதிவெடுக்கப்பட்டுள்ளன. சீனாவின் விளையாட்டு வளர்ச்சி சாதனைகள் இவ்விளையாட்டுப் போட்டியின் மூலம் பன்முகமாக வெளிக்காட்டப்பட்டுள்ளன என்று 15ஆவது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுத் துணை இயக்குநரும் சீன விளையாட்டுத் தலைமைப் பணியகத்தின் துணை தலைவருமான டுங்லீசின் 21ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
மேலும், இவ்விளையாட்டுப் போட்டி, அடுத்து நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரிப்புகளை மேற்கொள்ள அடிப்படையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
