தாராள வர்த்தகம் மற்றும் பலதரப்புவாதத்திற்கு உறுதியாக ஆதரவு அளித்து வருகின்ற ஐரோப்பா, தனது சொந்த தொழிற்துறை வளர்ச்சி பற்றிய கவலையையும் பாதுகாப்பவாத பாதிப்பையும் தடுக்கவில்லை. சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி என் நிறுவனம் இணைய பயனர்களிடையே கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. வர்த்தக பாதுகாப்பவாதம், தொழிற்துறையின் போட்டியாற்றலை மேம்படுத்த முடியாது. திறப்பு பணியில் ஊன்றி நின்று, சந்தைக்கு மதிப்பு அளிப்பதன் மூலம் மட்டுமே ஐரோப்பா, உண்மையாக வளரும் என்று இதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
கூடுதல் சுங்க வரி வசூலிப்பை அதிகரித்த ஐரோப்பாவின் செயல் சர்வதேச வர்த்தக விதிகளைக் கடுமையாக மீறியது என்று 84.1 விழுக்காடான கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். வர்த்தக பாதுகாப்புவாதம், ஐரோப்பிய தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டியாற்றலைக் குறைக்கும் என்று 82.6 விழுக்காடான கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
