ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்ற கான்செவிச் சி.எம்.ஜிக்கு சிறப்பு பேட்டி

Estimated read time 0 min read

சீன மக்கள் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெறுவரர்கள் என்று சீனாவின் கணிதவியல் துறை வளர்ச்சிக்கான உள்ளார்ந்த ஆற்றலை வெகுவாகப் பாராட்டிய ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்றவரான கான்செவிச், 3 ஆண்டுகளுக்கு முன்பே மதிப்பிட்டுள்ளார். இவ்வாண்டின் ஜூலை திங்களில் சீன கணிதவியலாளர் இருவரும் இப்பதக்கத்தைப் பெற்றுள்ளனர். இது குறித்து கான்செவிச் வியப்புறவில்லை. அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், கணிதவியல் துறையில் சீனாவில் அதிகமான திறமைசாலிகள் உள்ளனர். அதே வேளையில், தலைசிறந்த கணிதவியலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார்.

சீனாவின் கணிதவியல் துறையின் வளர்ச்சி குறித்து கான்செவிச் மேலும் கூறுகையில்,

சீனக் கணிதவியல் துறையின் நிலை ஒட்டுமொத்த அளவில் நிதானமாக அதிகரித்து வருகிறது. சீன கணித ஆராய்ச்சி துறையின் வளர்ச்சிக்கான எதிர்காலம் குறித்து நான் மிகவும் நம்பிக்கையைக் கொண்டுள்ளேன் என்றார்.

You May Also Like

More From Author