ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் குறிப்பிட்ட கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியன் ஜூலை 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதிலளிக்கையில், பிலிப்பைன்ஸ் தரப்பினர் தீய நோக்கத்துடன் சீன தரப்பின் சட்ட அமலாக்க பணியாளரைத் தாக்கியது குறித்து சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று கூறினார். பிலிப்பைன்ஸின் ஆத்திரமூட்டும் செயலைக் குறிப்பிட்ட ஒரு நாடு புறக்கணித்ததுடன், சீனா மீது ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி, சட்டவிரோதமான தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பைத் தொடர்ந்து பயன்படுத்தி தவறான கூற்றைப் பரப்புகிறது. இதனை சீனா உறுதியுடன் எதிர்க்கிறது. சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் கூட்டு முயற்சிகளின் கீழ், தற்போதைய தென் சீனக் கடலின் நிலைமை சீராக உள்ளது. பிலிப்பைன்ஸின் உரிமை மீறல் மற்றும் ஆத்திரமூட்டும் செயல் தான் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான ஊற்றுமூலம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் பேச்சுக்கு சீனா விமர்சனம்
You May Also Like
2026 இல் சந்திரனின் தென் துருவத்தை இலக்காகக் கொண்டுள்ள சீனா
December 25, 2025
நேபாளத் தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
December 16, 2024
