இந்தியாவிலிருந்து ஒற்றை-முறை கண்ணாடி இழை மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்கும் சீனா

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை-முறை கண்ணாடி இழையின் மீது தொடர்ந்து பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்க முடிவு எடுத்துள்ளதாக 2026ஆம் ஆண்டில் சீன வணிக அமைச்சகத்தின் 35ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருள் குவிப்பு விற்பனை எதிர்ப்பு விதிமுறையின் 50ஆவது விதியின்படி, தொடர்ந்து பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்கும் முன்மொழிவை சீன வணிக அமைச்சகம் ஆய்வு முடிவின்படி சீன அரசவையின் சுங்கவரி விதிப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் நாள் முதல், தொடர்ந்து 5 ஆண்டுகளாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை-முறை கண்ணாடி இழை மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான வரி வசூலிக்கும் என்று சுங்கவரி விதிப்பு ஆணையம் தீர்மானித்தது.

You May Also Like

More From Author