மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

Estimated read time 0 min read

மோட்டார் வாகன விதிகளில் அதிரடி திருத்தங்களை மேற்கொண்டு புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடெங்கும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு, முகவரி மற்றும் வயது சான்றாக மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி வழக்கறிஞர்களிடம் பெறப்படும் உறுதிமொழி பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வந்தன.

இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் போலியான முகவரிகள் மற்றும் தவறான பிறந்த தேதிகளை கொடுத்து உரிமங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டனர்.

முறைகேடுகளை அடியோடு ஒழித்து, சாலைப் பாதுகாப்பை பலப்படுத்தவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தற்போது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன்படி, இனிமேல் இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி வண்ணங்களில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க மத்திய அரசு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இனிமேல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மற்றும் வழக்கறிஞர் உறுதிமொழி பத்திரங்கள் முகவரி சான்றாக ஏற்கப்படாது. ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற சரிபார்க்கக்கூடிய ஆவணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், இணையவழி பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி தேர்வுக்கான தேர்ச்சி வரம்பு 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது

அதோடு, லைசென்சில் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசர கால தொடர்பு விவரங்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் திருத்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும், 30 நாட்கள் வரை முடிவு எடுக்கப்படாத விண்ணப்பங்கள் தானாகவே அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author