ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி…
திருநெல்வேலி மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொது தேர்வில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி என்ற சாதனை படைத்துள்ளது.
12ஆம் வகுப்பில் மாணவி லிபினா அருள் மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவி சாஸ்மித்தா ஆகியோர் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவிகள் தணு பிரபா, சுவீட்லின் அனி முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று அசத்தினர். பத்தாம் வகுப்பில் மாணவி சிவஶ்ரீ மற்றும் மாணவர் ஜோகேஷ் ராம் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று சாதித்தனர்.

தகவல் தொழில்நுட்பத்தில் சாஸ்மித்தா, கமிலஸ் ரோனி மற்றும் விக்ரம் ராஜா ஆகியோரும் தமிழில் சாஸ்மித்தாவும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வரலாறு படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ செல்வங்கள், அவர்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரையும் பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, செயலாளர் ஆகாஷ், ஆஷிஷ் லிங் மற்றும் முதல்வர் பிரவின்குமார் ஆகியோர் பாராட்டினர்.