ஆகஸ்டு 15ஆம் நாள், ஜப்பான் போரில் தோல்வி மற்றும் சரணடைந்த நினைவு கூரும் நினமாகும். அதேநாள் ஜப்பானிய தலைமையமைச்சர் இஷிபா ஷிகெரு உள்ளிட்டவர் யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 16ஆம் நாள் கூறுகையில், ஜப்பானிய இராணுவவாதம் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த சின்னமாக யசுகுனி கல்லறை திகழ்கிறது. வரலாற்றின் நீதி மற்றும் மனித குலத்தின் மனச்சாட்சியை அச்சுறுத்தலாக அமைந்த ஜப்பானின் இச்செயலுக்கு சீனா கடும் மனநிறைவின்மை தெரிவித்தது என்றார்.
மேலும், இவ்வாண்டு, சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவாகும். ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றைச் சரியாக புரிந்து கொண்டு, திரும்பி பார்க்க வேண்டும் என்றும், அமைதி வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், ஆசிய அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் சீனா வேண்டுகோள் விடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.