சன் யட் சான் கல்லறையில் அஞ்சலி செலுத்திய கோமின் தாங் கட்சி குழு

சீனாவின் கோமின் தாங் கட்சி தலைவர் ச்செங் லிவன் அம்மையார் தலைமையிலான பயணக் குழுவினர்கள், ஏப்ரல் 8ம் நாள் காலை நன்ஜிங் நகரிலுள்ள சன் யட் சான் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். சீன மக்களாட்சி புரட்சிக்கான மாபெரும் முன்னோடியான டாக்டர் சன் யட் சான் அவர்கள், இந்தக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

சீனாவின் கோமின் தாங் கட்சி தலைவர் ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனப் பெருநிலப் பகுதியில் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். 6 நாட்களில், இப்பயணக் குழு ஜியாங் சூ மாநிலம், ஷாங்காய் மாநகர், பெய்ஜிங் மாநகர் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளது.

You May Also Like

More From Author