தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
மாநிலக் கல்விக் கொள்கையின் (State Education Policy) அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இந்தப் புதிய தகவலைத் தெரிவித்தார்.
மாணவர்கள் புரிதலுடன் படிப்பதற்குத் தேவையான பாடத்திட்டங்கள் குறித்து வல்லுநர் குழுவுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தின் தனித்துவமான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய பாடத்திட்ட உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்
