ஒருதரப்புவாத மேலாதிக்கவாத தூதாண்மையாகத் அமெரிக்கா தீவிரமாக்கியது குறித்து சர்வதேச சமூகத்தில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.
உலக இணையப் பயனர்களிடையில் சீன ஊடகக் குழுமம் நடத்திய கருத்து கணிப்பு ஒன்றில், 90.7விழுக்காட்டினர் அமெரிக்காவின் மேலாதிக்கவாத தூதாண்மைச் செயல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குற்றஞ்சாட்டு மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. அமெரிக்காவின் இச்செயல், பொது சுகாதாரம், காலநிலை சமாளிப்பு உள்ளிட்ட உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக 57.8விழுக்காட்டினர் கருதியுள்ளனர். தற்போதைய சர்வதேச ஒழுங்கை அமெரிக்காவின் மேலாதிக்கவாத தூதாண்மை தொடர்ச்சியாக சவாலாக உருவெடுத்துள்ளது. உலக நிர்வாக அமைப்பு முறையில் நிலவிய பல பிரச்சினைகளும் இதன் மூலம் மீண்டும் ஏற்பட்டுள்ளன. இதனைச் சர்வதேச சமூகம் கைகோர்த்து கொண்டு கூட்டாகச் சமாளிக்க வேண்டும். இதில் பெரிய நாடுகள் மேலதிக பொறுப்பேற்று பயனுள்ளதாகப் பங்காற்ற வேண்டுமென 80.6விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
