ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்தியா vs பாகிஸ்தான் அணிகளின் கேப்டன்கள் கலந்துகொள்ளவிருந்த பாரம்பரியப் போட்டோஷூட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொள்ள மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ், இறுதிப் போட்டிக்கான தீவிரப் பயிற்சியில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறி, இந்த நிகழ்வைத் தவிர்த்துவிட்டதாகத் தகவல் வெளியானது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன், “இது சூர்யகுமாரின் தனிப்பட்ட முடிவு.
ஆனால், இந்தத் தவிர்க்கும் நடவடிக்கை இந்திய அணியின் மனநிலையைத்தான் காட்டுகிறது.” எனக் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டோஷூட்டை நிராகரித்தார் சூர்யகுமார் யாதவ்
