தற்போது ஒருசார்பு வாதம், பாதுகாப்பு வாதம் ஆகியவை தலைதூக்கி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் சீனா மீதான வர்த்தக தடைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இத்தகைய நிலைமையில் சீனா தயாரித்த குளிரூட்டி இயந்திரங்கள் போன்ற மின்சாரக் கருவிகள் ஐரோப்பாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சீன வர்த்தக மதிப்பு கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 10.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. பரஸ்பர நலன் மற்றும் கூட்டு வெற்றியே, இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பின் சாராம்சம் என்பதை இது முழுமையாக நிரூபித்துள்ளது. இது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனா கூட்டாளியாகும்.
சீன தயாரிப்புகள் உலகளவில் வரவேற்பைப் பெறுவதற்கான காரணம் பற்றி சீன சமூக அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், உலகளாவிய நுகர்வோரின் நடைமுறை தேவைகளில் சீனா எப்போதும் கவனம் செலுத்தி வருவதோடு, முழுமையான தொழில் அமைப்புமுறை, வினியோக சங்கிலி மற்றும் திறன்மிக்க பொருள் புழக்க வலையமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து, அதிக வேகத்துடன் சிறந்த தயாரிப்புகளையும் தீர்வுமுறைகளையும் சீனா வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
சீனத் தயாரிப்புகளின் வடிவமைப்பு துல்லியமானதாகவும் அவற்றின் தரம் சிறப்பானதாகவும் உள்ளது. மேலும், தரமிக்க சீனத் தயாரிப்புகளின் விலைகள் குறைவு. ரோபோடிக்ஸ் தொழிலை எடுத்துக்காட்டாக கூறினால், சீன ரோப்போக்களின் விலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஒரே மாதிரி பொருட்களின் விலையின் மூன்றில் ஒரு பகுதியாகும். ஆனால் சீனத் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் தரம் சர்வதேச வரையறையை எட்டியுள்ளன. செயல்திறனைத் தவிர, சீனத் தயாரிப்புகள் வழங்கும் சேவையும் சிறப்பாக உள்ளது.
உலகத்தின் தொழிற்சாலை என்ற நிலையிலிருந்து உலகளாவிய தீர்வுமுறை வழங்குபவராக வளர்ந்து வரும் சீனா, உலகளாவிய சவால்களைச் சமாளிப்பதற்கு தனது திட்டங்களை வழங்குவதோடு, கூட்டு வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறது. மேலும், சீனா நம்பத்தக்க ஒத்துழைப்பு கூட்டாளியாகும் என்பதை பல உண்மைகள் நிரூபித்துள்ளன.
