காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவில் இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று சமீபத்தில் கூறிய அறிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் அவர் ஆற்றிய உரையில் இட ஒதுக்கீடு குறித்து பேசியதற்கு பாஜக கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஒரு நேர்காணலில் பேசிய ராகுல் காந்தி, “நேற்று யாரோ நான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று தவறாகக் கூறினர். 50% வரம்பிற்கு மேல் இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம்.” என்று கூறினார்.