“கால் துண்டாகி, ரத்தம் வடிந்து 2 நாளா தவிப்பு….!”

Estimated read time 0 min read

உக்ரைன் போர்க்களத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய வீரர்களை மீட்க ‘ஸ்டார்கேட்’ என்ற புதிய வான்வழி மீட்பு ட்ரோனை உக்ரைன் ராணுவம் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது.

ரஷ்ய எல்லைக்கு அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், காலில் பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறிய நிலையில் 2 நாட்களாகப் போர்க்களத்தில் சிக்கியிருந்த 24 வயது வீரர் உட்பட இருவர் இந்த ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வீரரின் கால் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், 20 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல முடியாத சூழலில் இருந்த அவரை, இந்த சிறிய மீட்பு ட்ரோன் மிகச் சரியாக வந்தடைந்து காப்பாற்றியுள்ளது.

‘சிகார்’ வடிவில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இந்த மீட்புக் கூண்டில் காயமடைந்த வீரரை வைத்து, வெறும் 15 நிமிடங்களுக்குள் ஆபத்தான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு ட்ரோன் கொண்டு சென்றுள்ளது.

ரஷ்ய எல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆபத்தான ‘கிரே ஜோன்’ பகுதியில் சிக்கியிருந்த வீரர்களை மீட்க, உக்ரைன் ராணுவம் பல வார சோதனைகளுக்குப் பிறகே இந்த நவீன ட்ரோனைப் போர்க்களத்தில் களமிறக்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author