தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர் பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக ‘அமரன்’ படப்புகழ் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிங்க்வில்லாவின் அறிக்கையின்படி, தற்போது மாருதியின் ‘தி ராஜா சாப்’ உட்பட பல படங்களில் நடித்து வரும் பிரபாஸிடம், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இராணுவ பின்னணியிலான ஒரு ஸ்கிரிப்டை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் நடிகர் ஈர்க்கப்பட்டு, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு மற்றொரு மீட்டிங்கிற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
யுவி கிரியேஷன்ஸ் இந்த திட்டத்தை தயாரிக்கக்கூடும்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைகிறாரா பிரபாஸ்?
