சீனா ரயில்வே குழுமத்தின் வூஹான் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் வூஹான் பகுதியில் மொத்தமாக 560 சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன. கடந்த முழு ஆண்டில் இருந்த 538ஐ விட அதிகம்.
வூஹான் பகுதியில் சீனா-ஐரோப்பா சரக்கு தொடர்வண்டி 2012ஆம் ஆண்டு இயங்கியது முதல் இதுவரை, 40 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 112 நகரங்களுக்குச் சேவை புரிந்த 48 சர்வதேசப் போக்குவரத்து வழிகளை கொண்டுள்ளது. சீனாவிலுள்ள வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு முக்கிய போக்குவரத்து வழிமுறையாக இது விளங்கியுள்ளது.
மேலும், சேவையில் இயங்கும் தொடர்வண்டிகள் பெரிதும் அதிகரிப்பதோடு, அனுப்பப்பட்ட சரக்குகளின் வகைகளும் செழுமையாகி வருகின்றன என்று தெரிய வந்துள்ளது.