கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் கலை!

Estimated read time 1 min read

அக்டோபர் 28 : சர்வதேச அனிமேஷன் தினம்.
கற்பனையில் உதிக்கும் எளிய கோடுகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்து, அவற்றை அசையும் காட்சிப் படிமங்களாக மாற்றி அமைக்கும் கலை தான் அனிமேஷன்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி உலகம் முழுவதும் ‘சர்வதேச அனிமேஷன் தினம்’ (International Animation Day) மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரைகலை, காட்சி ஊடகம் மற்றும் கணினித் தொழில்நுட்பம் மூலம் கற்பனை உலகிற்கு உயிர் கொடுக்கும் படைப்பாளிகளையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த நாள் நினைவுகூறப்படுகிறது.
நிலையான ஓவியங்களை அசைவூட்டி, கதைகளாகத் திரையில் நிஜமாக்கும் இந்த அற்புதக் கலையின் வரலாற்றையும், நவீன அனிமேஷன் சேனல்களின் பங்களிப்பையும் விரிவாகப் பார்ப்போம்.
வரலாற்றுப் பின்னணியும் சர்வதேச அனிமேஷன் தினமும்:
அனிமேஷன் துறையின் வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது:
ஒளி அரங்கு 1892-ம் ஆண்டு அக்டோபர் 28 அன்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ்-எமில் ரெய்னாட் பாரிஸில் உள்ள ‘முஸீ கிரேவின்’ அருங்காட்சியகத்தில் ‘தியேட்டர் ஆப்டிக்’ என்ற தனது கருவிகள் மூலம் முதன்முதலில் அசைவூட்டப் படக்காட்சிகளைப் பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்.
வரலாற்றுத் தொடக்கம்:
கையால் வரையப்பட்ட பல்லாயிரக்கணக்கான படங்களை வரிசையாக நகர்த்தி, இசையுடன் சேர்த்துத் திரையிடப்பட்ட இந்த நிகழ்வே அனிமேஷன் திரையிடலின் முதல் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், 2002-ம் ஆண்டில் சர்வதேச அனிமேஷன் திரைப்பட அமைப்பு அக்டோபர் 28-ம் தேதியை ‘சர்வதேச அனிமேஷன் தினமாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அனிமேஷன் கலையின் பரிணாம வளர்ச்சி:
காலப்போக்கில் அனிமேஷன் துறை பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களுடன் வளர்ந்துள்ளது:
2D காகிதங்களில் ஒவ்வொரு சட்டகமாக (Frame by Frame) வரைந்து உருவாக்கப்பட்ட பாரம்பரிய முறை. வால்ட் டிஸ்னியின் தொடக்க காலப் படைப்புகளான மிக்கி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
ஸ்டாப் மோஷன்:
களிமண், பொம்மைகள் அல்லது பொருட்களைச் சிறிதளவு நகர்த்திப் புகைப்படம் எடுத்து உருவாக்கப்படும் கலை வடிவம்.
3D அனிமேஷன்:
கணினித் தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பின், கதாபாத்திரங்களுக்கும் சூழலுக்கும் முப்பரிமாண வடிவம் கொடுத்து தற்போதைய நவீன திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் முறை.
விர்ச்சுவல் ரியாலிட்டி:
தற்போதைய காலகட்டத்தில் அனிமேஷன் கலை பார்வையாளர்களை நேரடி அனுபவ உலகிற்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் சேனல்களின் பட்டியல்:
இன்றைய காலகட்டத்தில் அனிமேஷன் கலை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தொலைக்காட்சிகள் மூலம் சென்றடைகிறது.
இந்தியாவில் குறிப்பாகத் தமிழில் அனிமேஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முக்கியத் தொலைக்காட்சி சேனல்களாக
சுட்டி டிவி, முழுக்க முழுக்கத் தமிழ் மொழியிலேயே கார்ட்டூன்கள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
2. தமிழ் ஆடியோ ஃபீட் வசதி கொண்ட தேசிய மற்றும் சர்வதேச சேனல்கள்.
கார்ட்டூன் நெட்வொர்க் உலகப் புகழ்பெற்ற பென் 10 (டாம் அண்ட் ஜெரி (Tom and Jerry) போன்ற அனிமேஷன் தொடர்களைத் தமிழில் வழங்குகிறது.
போகோ, நிக்கலோடியன் நின்ஜா ஹத்தோடி, ஷின் சான், மோட்டு பட்லு, போன்ற நகைச்சுவை மற்றும் சாகசக் கார்ட்டூன்கள் ஒளிபரப்பப்படுகிறது.
டிஸ்னி சேனல் :
டோரேமான் (Doraemon), மிக்கி மவுஸ், மிகச் சிறிய குழந்தைகளைக் கவரும் வண்ணமயமான அனிமேஷன் தொடர்கள்.
மற்றும் பல்வேறு சர்வதேச அனிமேஷன் தொடர்கள் தமிழில் வழங்கப்படுகின்றன.
ஹங்காமா டிவி:
ஜப்பான் அனிமேஷன் மற்றும் நகைச்சுவை சார்ந்த கார்ட்டூன் தொடர்களுக்குப் பெயர் பெற்ற சேனல்.
சோனி யே:
ஒக்கி அண்ட் தி காக்ரோட்சஸ் (Oggy and the Cockroaches), சிவா போன்ற பல பிரபல தொடர்களைத் தமிழில் ஒளிபரப்புகிறது.
நிக் சோனிக்:
சாகசம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த அனிமேஷன் தொடர்களை வழங்கும் சேனல். டிஸ்கவரி கிட்ஸ்:
லிட்டில் சிங்கம் (Little Singham), பண்ட் புட் அவுர் புட்பாடங் மழலையர்களுக்கான கற்றல் மற்றும் விளையாட்டு சார்ந்த அனிமேஷன் நிகழ்ச்சிகள்.
இந்திய அனிமேஷன் படைப்புகளுக்குப் பிரபலமான சேனல்.
சூப்பர் ஹங்காமா சிறுவர்களுக்கான பிரத்யேக அனிமேஷன் ஆக்ஷன் நிகழ்ச்சிகள்.
இடிவி பால் பாரத் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளில் அனிமேஷன் நிகழ்ச்சிகளை வழங்கிறது.
இப்படி நிறைய அனிமேஷன் பட்டியல் அடிக்கிக்கொண்டே போகலாம்.
அனிமேஷன் என்பது வெறும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல;
அது மொழியியல் தடைகளைக் கடந்து உலக அளவில் உள்ள மனிதர்களை உணர்வுபூர்வமாக இணைக்கும் சக்தி வாய்ந்த காட்சி ஊடகமாகும்.
ஒரு சில நிமிட அனிமேஷன் காட்சிக்கு பின்னால் ஓவியர்கள், கணினி நிபுணர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள் எனப் பலரின் மாதக்கணக்கான உழைப்பு ஒளிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளைத் தாண்டி இன்று விளம்பரம், கல்வி, மருத்துவம், கேமிங் எனப் பல துறைகளிலும் அனிமேஷன் கலை பரந்து விரிந்துள்ளது.
கற்பனையைத் திரையில் நிஜமாக்கும் இந்த அற்புதக் கலையையும், அதன் பின்னணியில் இயங்கும் கலைஞர்களையும் போற்றி வரவேற்பதே சர்வதேச அனிமேஷன் தினத்தின் முதன்மை நோக்கமாகும்.
– யாழினி சோமு

Please follow and like us:

You May Also Like

More From Author