சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இந்தியாவில் நடத்தப்படும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான சிறப்புப் பிரதிநிதிகளின் 24வது சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஆகஸ்டு 18ஆம் நாள் கூறுகையில், கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், இந்தியத் தலைமையமைச்சர் மோடியுடன் கசானில் வெற்றிகரமாக சந்தித்து, சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு வழிக்காட்டினார் என்றார். மேலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயின் இந்தப் பயணத்தை வாய்ப்பாக கொண்டு, இந்தியாவுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய ஒத்தக் கருத்தைச் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, பயனுள்ள ஒத்துழைப்புகளை அதிகரித்து, கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் தீர்த்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.