“87 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார தோல்வி!” – 260 ரன் டார்கெட்… சீட்டுக்கட்டு போலச் சரிந்த விக்கெட்டுகள்… நியூஸிலாந்திடம் பிளாக் அவுட்..!!! 

Estimated read time 1 min read

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. ரன்கள் வித்தியாசத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சந்திக்கும் 2-வது மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றிவிட்ட நிலையில், இந்தப் போட்டியில் ஆடும் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

இஷான் கிஷன் மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார், அதே வேளையில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும், புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக மயங்க் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் வெறும் 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் மொத்தமாக 49 பந்துகளில் 10 சிக்ஸர்களுடன் 107 ரன்கள் குவித்து நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட உதவினார். மைக்கேல் பிரேஸ்வெல்லும் தனது பங்கிற்கு 25 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் குவித்து இந்தியப் பந்துவீச்சை வீழ்த்தினார்.

260 ரன்கள் என்ற அசுர இலக்கைத் துரத்திய இந்திய அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாகத் திலக் வர்மா 35 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவை 20 ஓவர்களில் 172/9 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார். இதன்மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றியப் பதிவு செய்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author