வரலாற்றைத் திரித்துப்புரட்ட முயன்ற ஜப்பான்

விவண்ட் என்ற தொலைக்காட்சி நாடகம், குறிப்பிட்ட நாட்டை களங்கப்படுத்தும் நோக்கமில்லை என்று ஜப்பானின் டிபிஎஸ் தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர் 28ம் நாள் தெரிவித்துள்ளார். இது ஜப்பானிலும் உலகளவிலும் மேலும் கடுமையான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

2ஆவது உலகப் போரில் ஜப்பான், சீனாவை ஆக்கிரமித்து, மனிதகுலத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களை இழைத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஜப்பான், பண்பாட்டுப் படைப்புகளின் மூலம் சீனாவைக் களங்கப்படுத்தி, சீனாவின் மீதான பகைமையைப் பரப்பி வருகிறது.

டிபிஎஸ், அரசு சாரா வணிகத் தொலைக்காட்சி நிலையமாக இருந்த போதிலும், உண்மையில் அது ஜப்பான் அரசின் வெளிப்புறப் பிரசாரத் தந்திரத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. விவண்ட் என்ற நாடகத்தின் பின்னணியில் ஒழுங்கான ஒதுக்கீடுடைய தயாரிப்பு-பரப்புதல் தொடர் ஒன்று உள்ளது. தொலைக்காட்சி மற்றும் திரைப்படப் படைப்புகள் மூலம், சீனாவை இழிவுபடுத்துவது, ஜப்பானின் வலது சக்திகள், வரலாற்றுத் திருத்தவாதத்தை முன்னெடுக்கும் ஒரு பகுதியாகும். அவர்கள் வரலாற்றைத் திரித்துப் புரட்டி, “ஜப்பான்-சீன இராணுவ மோதல்” போன்ற தவறான கூற்றைப் பரவல் செய்து வருகின்றனர். மறு இராணுவமயமாக்கம் மற்றும் புதிய இராணுவ வெறிக்கு ஆயத்தம் செய்வது, அவர்களின் ஆழ்ந்த நோக்கமாகும்.

ஜப்பானின் 2026ம் ஆண்டு தற்காப்பு வெள்ளையறிக்கையில், சீனா ஜப்பானின் மிகப் பெரிய நெடுநோக்கு சவாலாக வரையறுக்கப்பட்டது. 2026ம் நிதியாண்டில் தற்காப்பு வரவுச் செலவு திட்டம் 9 இலட்சம் கோடி ஜப்பானிய யெனைத் தாண்டியதோடு, சுமார் 1000 கி.மி தொலைவு செல்லக் கூடிய ஏவுகணைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பானின் புதிய இராணுவ வெறி, பிராந்தியம் மற்றும் உலகின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் நடைமுறை அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author