இன்றைய சீனாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் புரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வில் கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை விடாமுயற்சியுடன் பன்முகங்களிலும் வலுப்படுத்துவது பற்றிய விரிவான திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் கட்சியின் ஒழுங்குமுறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றது. சொந்த திறமை மற்றும் மக்களின் ஆதரவுடன் பல்வகைப் பிரச்சினைகளைக் கையாண்டு இது வலுவடைந்து வருகின்றது.
நடப்பு அமர்வுக் கூட்டத்தில் கட்சியின் விதிமுறைக்கட்டுமானத்தை வலுபடுத்துவது கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதற்கான நீண்டகால அடிப்படைக் கோட்பாடாகும் என்பது தெரிவிக்கப்பட்டது. இது சர்வதேச சமூகத்தில் பரந்த கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் புதிய ஐந்தாண்டு திட்ட இலக்கை நனவாக்குவதற்கு இது உத்தரவாதம் அளித்துள்ளது என்று அமெரிக்காவின் ராபர்ட் மோலிஸ் பல்கலைகழகத்தின் துணைப் பேராசிரியர் மொலேடி கருத்து தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு சீனத் தேசிய புள்ளியியல் பணியகம் மேற்கொண்ட ஓர் ஆய்வு முடிவின்படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி வெளியிட்ட 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளின் நடைமுறையாக்கப் பயனுக்கு விசாரணைபடுத்தப்பட்டவர்களில் 95.5 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், கட்சி மற்றும் அரசின் நடத்தையின் தலைமையில் சமூக ஒழுங்குமுறை மேம்பட்டு வருவதற்கு 92.2 விழுக்காட்டினர் மனநிறைவு தெரிவித்துள்ளனர்.
