நமக்கு நேரம் முடிஞ்சுட்டு..! “இனி எல்லாரும் காலிதான்”.. நடு வானில் அலறிய பயணிகள்…  

Estimated read time 2 min read

அமெரிக்காவில் 9 பேருடன் பயணித்த தனியார் சிறிய ரக விமானம் ஒன்று, தெற்கு புளோரிடா குடியிருப்புப் பகுதியில் செங்குத்தாக விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் விமானத்தில் இருந்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், பாம் பீச் கவுண்டியில் உள்ள கிரெஸ்டேவன் பகுதிக்கு அருகே வீடுகளுக்கு மிக அருகில் வீதியில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

விமானம் வானில் இருந்து அதிவேகமாக தரையை நோக்கிப் பாய்ந்து வந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறும் பின்தொடர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 9 பேருமே உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் ஷான் டஃபி தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்டுப்பாட்டு அறையுடன் விமானி பேசிய உரையாடல்கள் தற்போது வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், “விமானம் நிமிடத்திற்கு 20,000 அடிகள் வேகத்தில் கீழே இறங்குகிறது, நாங்கள் தரையில் மோதப் போகிறோம்” என்று விமானி அலறிய சத்தமும், இறுதியாக பெண் பணியாளர் ஒருவர் “நமக்கு நேரம் முடிந்துவிட்டது” என உறைந்துபோய் கத்திய சத்தமும் பதிவாகியுள்ளது.

முதலில் லேசான பனி மற்றும் சீரற்ற வானிலை நிலவுவதாகத் தெரிவித்த விமானிகள், அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகமும் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author