தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக, இதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, ஜூலை 2 (புதன்) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
ஜூலை 3 மற்றும் 4 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஜூலை 5 முதல் 7 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
