சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு விமான நிலையங்கள் வழியாகப் பயணம் செய்ய இனி ‘ஏர்போர்ட் டிரான்சிட் விசா’ தேவையில்லை எனத் தூதரக ரீதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அதிரடி மாற்றம், இந்தியப் பயணிகளுக்கு புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையிலான ராஜதந்திர உறவை மேம்படுத்துவதுடன், பாரிஸ் போன்ற நகரங்களை உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கல்வி மற்றும் பணிக்காக செல்லும் இந்திய மாணவர்களுக்கும், ஐடி துறையினருக்கும் இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இந்தியர்களுக்கு பிரான்ஸ் அரசின் சலுகை!இனி விசா இல்லாமல் பாரிஸ் வழியாக பயணம் செய்யலாம்
