இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் நடத்திய வசந்த விழா வரவேற்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் இலங்கையில் வாழும் சீன சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், இலங்கை நாட்டின் சிறப்பு விருந்தினர்களுடன் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் அந்நாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குய், கடந்த ஆண்டில் சீனா-இலங்கை உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பின் பிற துறைகளில் இரு நாடுகளும் பல சாதனைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சரான ஹெராத் பேசுகையில், இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளைப் பாராட்டினார், சீனா இலங்கைக்கு மதிப்புமிக்க மற்றும் நம்பகமான நண்பராக இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.
டிட்வா புயல் பேரழிவைத் தொடர்ந்து சீனா வழங்கிய உறுதியான ஆதரவிற்கும், உள்கட்டமைப்பு, மேம்பாடு, வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இலங்கையுடன் அதன் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கும் இலங்கை நன்றி தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்
