சௌதி அரேபியா தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளிவிவகார ஆணையத்தின் அலுவலகத் தலைவருமான வாங்யீ, நவம்பர் 2ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், சௌதி அரேபியா நாட்டின் செயலாளரும்தேசியப்  பாதுகாப்பு ஆலோசகருமான ஐபானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்புறவின் வளர்ச்சி மற்றும் இரு தரப்புக்களுக்கிடையில் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து சௌதி அரேபிய பட்டத்து இளவரசரும் தலைமையமைச்சருமான முகமத் எழுதிய கடிதத்தை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு ஐபான் ஒப்படைத்தார்.

அப்போது வாங்யீ கூறுகையில், தற்போதைய பிராந்திய நிலைமை, மீண்டும் போர் மற்றும் அமைதிகளுக்கிடையில் முக்கிய காலக்கட்டத்தில் உள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்துள்ள முன்மொழிவுகளிலும் கருத்துக்களிலும் சீனா எப்போதும் ஊன்றி நிற்கிறது. சௌதி அரேபியா உள்ளிட்ட பல தரப்புகளுடன் சேர்ந்து பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்புயும் சீனா மேற்கொள்ள விரும்புவதாக கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author