சீனத் தலைமை அமைச்சர் லீ ச்சியாங் நவம்பர் 3ஆம் நாள் ஜெஜியாங் மாநிலத்தின் உசென் நகரில் 2026 உலக இணைய மாமாநாட்டின் உசென் உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்த போதிலும், மனிதகுலத்துக்கு இணையம் எப்படி நன்மை புரிய வேண்டும் என்பதில் பொது மக்களின் கவனம் ஒருபோதும் மாறவில்லை. 2015 உலக இணைய மாநாட்டில் இணையவெளியில் பொது எதிர்கால சமூகத்தை கட்டமைப்பது குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த கருத்து, இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனாவின் திட்டத்தை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், இணைய வளர்ச்சி நுண்ணறிவு சார் மற்றும் முறையான மாற்றத்தைக் கடந்து செல்கிறது. தற்போதைய இணைய வளர்ச்சிக்கு, மக்களை அடிப்படையாகக் கொண்ட விழுமியம் மேலும் தேவை. இணையவெளியில் பொது எதிர்கால சமூகத்தை கட்டமைப்பதற்கு அறிவியல் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கென உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பை சீனா ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி, உலகளாவிய இணைய மேலாண்மை நியாயமான திசையை நோக்கி வளர ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
