சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த உறுப்பினரும், நீண்டகால சோதனையை தாக்குபிடித்த விசுவாசமான கம்யூனிச வீரரும், கட்சியின் ஐக்கிய முன்னணி, சீனக் கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தை ஆகிய பணிகளின் தலைசிறந்த தலைவரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது மற்றும் 18ஆவது மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 10ஆவது தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும், முன்னாள் சீன அரசவை உறுப்பினரும், முன்னாள் துணைத் தலைமையமைச்சருமான லியூ யான்டோங் அம்மையாரின் உடல் 3ஆம் நாள் பெய்ஜிங் பாபாவ்ஷான் புரட்சிக் கரக் கல்லறையில் தகனம் செய்யப்பட்டது.
காலை 9:30மணிக்கு, ஷிச்சின்பிங், சாவ்லெஜி, வாங்ஹூநின், சைஜி, டிங்சுயேசியாங், லிசி, ஹேன்சேங் முதலியோர் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
