இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், ஜடேஜா ஆறு முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம், சுனில் கவாஸ்கர் (1979), விராட் கோலி (2018) மற்றும் ரிஷப் பண்ட் (2025) ஆகியோரின் கூட்டு சாதனையை முறியடித்துள்ளார்.
ஓவலில் நடந்து வரும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 77 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தது நடப்பு தொடரில் அவரது ஆறாவது 50+ ஸ்கோராகும்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக 50+ அடித்த வீரர்; ரவீந்திர ஜடேஜா சாதனை
