அண்மையில், “சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்தி, அழகான சீனாவின் கட்டுமானத்தை முன்னேற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆவணம் ஒன்றைச் சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகமும், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையமும் கூட்டாக வெளியிட்டன.
2035ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் துறையில் புத்தாக்க அமைப்பு முறையின் ஒட்டுமொத்த செயல்திறனைப் பெரிதும் மேம்படுத்தி, தேசிய நெடுநோக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வலிமையைப் பன்முகங்களிலும் வலுப்படுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் கோட்பாட்டு அணுகுமுறை பெரிய முன்னேற்றங்களைப் பெற வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் சூழலின் அடிப்படை முன்னேற்றத்திற்கும் அழகான சீனாவின் இலக்கை அடிப்படையில் நனவாக்குவதற்கும் வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.