சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நவம்பர் 18ஆம் நாள் மாஸ்கோவிற்குச் சென்று, அங்கு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் குழுவின் 24வது கூட்டத்தில் பங்கெடுத்தார். இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள், கூட்டாளியுறவு நாடுகள் முதலியவற்றின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உபசரிப்பு நாட்டின் விருந்தினர்கள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். ரஷிய தலைமையமைச்சர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
லீச்சியாங் கூறுகையில்,
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக ஆட்சி முறை முன்மொழிவு, உலகின் மாற்றத்தைச் சர்வதேச சமூகம் கூட்டாகச் சமாளித்து, அவசர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சீனாவின் அறிவுத் திறமை மற்றும் தீர்வு வழிமுறைகளை வழங்கியுள்ளது என்றார். இவ்வமைப்பின் உறப்பு நாடுகளுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்குப் பிறகு, பொது அறிக்கை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், ரயில், சமூக வளர்ச்சி மற்றும் உத்தரவாதம் போன்ற துறைகளின் ஒத்துழைப்பு ஆவணங்களில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து லீச்சியாங் கையெழுத்திட்டு, இவ்வமைப்பின் கட்டுமானம் தொடர்பான தீர்மானங்களுக்கு அங்கீகாரம் அளித்தார்.
