சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் ஆஸ்திரிய தலைமையமைச்சர் ஸ்டோக்கரைச் சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீன-ஆஸ்திரிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு ஒத்துழைப்பு பயனுள்ள சாதனைகளை அதிகமாகப் பெற்று, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களை ஏற்படுத்தியுள்ளது. சீனா ஆஸ்திரியாவுடன் இணைந்து புதிய எரியாற்றல் வாகனம், செயற்கை நுண்ணறிவு, எண்ணியல் பொருளாதாரம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்புகளை விரிவாக்கி, மேலும் நியாயமான உலக ஆட்சிமுறையை உருவாக்கக் கூட்டாகப் பங்காற்ற விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
