குக் தீவுகளின் தலைமையமைச்சர் மார்க் பிரௌன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக சீனாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சீனாவின் வளர்ச்சி குறித்து அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும், இது குறித்து சீன ஊடகக் குழுமத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறுகையில், குக் தீவுகளும், சீனாவும் கையொப்பமிட்ட பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உடன்படிக்கை, பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்புகளுக்கு கட்டுக்கோப்பை வழங்கியுள்ளது.
இரு நாடுகளின் பொது அக்கறை கொண்ட அம்சங்களும், கூட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை வாய்ந்த விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது, பல அறிவியல் ஆய்வு மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது. சீனாவுடனான கூட்டாளி உறவு மற்றும் ஒத்துழைப்புகளின் மூலம், குக் தீவுகளின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் திறனை உயர்த்த விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகள் நீண்டகாலமாக ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ முறையில் செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். குக் தீவுகளின் வளர்ச்சிக்கு சீனா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தோடு, எதிர்காலத்தில் சீனாவுடன் பல துறைகளில் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.